வாலாஜாபேட்டை: நவக்கிரக தோஷங்கள் விலக, வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், நேற்று காலச்சக்கர பூஜை நடந்தது. முரளிதர சுவாமிகள் தலைமையில் நடந்த இந்த பூஜையில், 27 நட்சத்திரங்களுக்கு நவதானியங்களைக் கொண்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், பிரசாதமாக பக்தர்களுக்கு, காலச்சக்கரம் வழங்கப்பட்டது.