பதிவு செய்த நாள்
16
பிப்
2012
11:02
தூத்துக்குடி:கோவில்பட்டி அருகே அய்யனேரி கிராமத்தில் அமைந்துள்ள காளியம்மன் கோயில் மஹா கும்பாபிஷேக விழா நடந்தது.தமிழ்நாடு தேவர் பேரவை தலைவர் சீனிச்சாமி தலைமையில் உண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் சண்முகம் மற்றும் காளியம்மன் ரியல் எஸ்டேட் உரிமையாளர் காளியப்பன் முன்னிலையில் காளியம்மன், பைரவர், வீரபுத்திரர், மேலும் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட பாலவிநாயகர், பாலமுருகன், தட்சிணாமூர்த்தி, அன்னை ஸ்ரீகிரியா சக்தி ஆகிய தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த 10ம் தேதி காலை கணபதி பூஜையுடன் விழா துவங்கியது. புண்யாகவாசனம், மஹாகணபதி ஹோமம், நவக்கிரஹ பூஜை, தனபூஜை, தான்யபூஜை, கோ பூஜை, அனுக்ஞை ஆகிய பூஜைகள் நடந்தது. 12ம் தேதி காலை நான்காம் கால யாகசாலை பூஜை, நாடிசந்தனம், த்ரவ்யாஹீதி, பூர்ணாஹீதி, தீபாராதனையும், யாகசாலையில் இருந்து கும்பம் எழுந்தருளி கும்ப லக்னத்தில் கோபுரத்திற்கு மஹா கும்பாபிஷேகமும் தொடர்ந்து காளியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம், மஹா அபிஷேகம், அலங்கார தீபாராதனையும் நடந்தது. அதையடுத்து, முளைப்பாரி மண்டபத்தை கோயம்புத்தூர் டிஎஸ்பி.,ஈஸ்வரி திறந்து வைத்தார். மதியம் கோவில்பட்டி நகர்மன்ற உறுப்பினர் சரவணன் மற்றும் மாரிமுத்து ஆகியோரால் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் தேமுதிக மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சீனிவாசன், விஜயபாண்டியன், முத்து ராமலிங்கம், சுந்தர்ராஜ், அய்யாச்சாமி, ராமர், வெள்ளைப்பாண்டி, முருகன், ஞானகுரு, மாரிமுத்து, முனியசாமி, அசோக்குமார் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஓய்வு பெற்ற ஆசிரியரும், திருப்பணிக்குழுத் தலைவருமான பரமசிவம், ஆசிரியர் சத்தியமூர்த்தி, அய்யனேரி துணைத்தலைவர் வேலுச்சாமி ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.