பதிவு செய்த நாள்
16
பிப்
2012
11:02
தூத்துக்குடி:பெரியநாயகபுரம் பரி.இம்மானுவேல் ஆலய பிரதிஷ்டை விழா மற்றும் அசன பண்டிகை நடந்தது.கோரம்பள்ளம் அருகே உள்ள பெரியநாயகபுரம் ஆலய பிரதிஷ்டை விழா மற்றும் அசன பண்டிகை விழா நேற்று நடந்தது. விழாவில் முக்கியநாளான நேற்று அதிகாலையில் பிரதிஷ்டை விழா மற்றும் திருவிருந்து ஆராதனை நடந்தது. தொடர்ந்து மாலையில் அசன ஐக்கிய விருந்து நடந்தது. அசனவிருந்தில் கோரம்பள்ளம் சுற்றுவட்டார பகுதியைச்சேர்ந்த பொதுமக்கள், சபை மக்கள் பலர் கலந்துகொண்டனர். சேகரகுரு ஆபிரகாம் பீற்றர், சபை ஊழியர் கோயில்பிச்சை ஜெபராஜ், ஆகியோர் சிறப்பு ஆராதனை நடத்தினர். விழாவில் தொழிலதிபர் பொன்துரை, பொன்மெடிக்கல்ஸ் உரிமையாளர் ஞானராஜ், ரத்தினம் டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் பென்னி, கோரம்பள்ளம் பஞ்,முன்னாள் தலைவர் ஸ்ரீனிநாயகம். கோரம்பள்ளம் பஞ்,துணைத்தலைவர் அதிசயராஜ், ராபர்ட்கால்டுவெல் சபை மன்ற உறுப்பினர் தனசிங், எபி ஸ்டோர்ஸ் உரிமையாளர்கள் சுந்தர்ராஜ், அல்பட்ராஜ், கனகராஜ், பிரபு சாமியானா உரிமையாளர் இன்பராஜ், சுதாமில்க் ஏஜென்சி உரிமையாளர்கள் பெரியநாயகம், ஜெயக்குமார், மறவன்மடம் சேகர கமிட்டி உறுப்பினர் கிறிஸ்டோபர், தொழிலதிபர் செல்வின், ஆலயத்தின் உறுப்பினர் பொன்துரை, ஜாய்பேக்கரி உரிமையாளர்கள் ஜெபதுரை, மெல்வின் ஜேக்கப், தேவகிருபை சேர்மார்ட் உரிமையாளர் குணதுரை,ஜெபராஜ், டிசி மெம்பர்கள் அய்யாத்துரை, இம்மானுவேல், மறவன்மடம் சேகர செயலாளர் செல்லத்துரை, உறுப்பினர்கள் தேவதாஸ், தங்கத்துரை, ராபர்ட் கால்டுவெல்சபை மன்ற செயலாளர் ஜெயதுரை,பொன்ராஜ், மறவன்மடம் சேகர பொருளாளர் எட்வர்ட்ராஜ், ஆசிரியர் சேகர ஊழியரும், டிசிமெம்பருமான அருள்குமார், கலா டிரைடர்ஸ் உரிமையாளர் ரூபஸ், ராஜசிங், அகஸ்டின் செல்வக்குமார், கோரம்பள்ளம் பஞ்., உறுப்பினர் பிரபாகரன் தனராஜ் மற்றும் சபை மக்கள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை பெரியநாயகபுரம் பரி.இம்மானுவேல் ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.