பதிவு செய்த நாள்
30
நவ
2018
12:11
திருப்பூர்:கார்த்திகை மாதம் துவங்கிய, 10 நாளில் சபரிமலைசீசன் சூடுபிடித்ததால், கேரள செல்லும் ரயில்களில் டிக்கெட் முன்பதிவு, ஹவுஸ்புல் நிலையை எட்டியுள்ளது.சபரிமலை சீசன் துவங்கியுள்ள நிலையில், ரயிலில்செல்ல விரும்பும் பக்தர்கள்வசதிக்காக, தெற்கு ரயில்வே, 26 சிறப்பு ரயில்கள் இயக்குகிறது. சென்னை மட்டுமன்றி ஆந்திராவில் இருந்தும் கேரளாவுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இவற்றுக்கான டிக்கெட்முன்பதிவு, துவக்க நாளிலே நிறைவு பெற்றது.முன்பதிவு முடிந்த நிலையில், டிச., மற்றும் ஜனவரியில், கேரள மாநிலம் கோட்டயம், கொல்லம், செங்கன்னூர் வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலிலும் முன்பதிவு நிறைவு பெற்றுள்ளது. ஆந்திரா - தமிழகம் - கேரளாவை இணைக்கும் வகையில் தினசரி இயங்கும் அனைத்து ரயில்களிலும், அனைத்து வகை முன்பதிவும், 98 சதவீதம் நிறைவடைந்து விட்டது.
வாரந்திர ரயில்களில் மட்டும், 10 சதவீத இருக்கைமுன்பதிவு செய்யப்படாமல் உள்ளது. சேலம் கோட்ட, ரயில் டிக்கெட் முன்பதிவு அலு வலர்களிடம் கேட்டபோது, சபரிமலைக்கு முன்பதிவு முடிந்துள்ள நிலையில், காத்திருப்போர் பட்டியல் அதிகளவில் உள்ளது. தேவை யிருப்பின், கூடுதலாக, சிறப்பு ரயில் இயக்குவது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து முடி வெடுப்பர் என்றனர்.