மங்கலம்பேட்டை கோரக்க சித்தர் சமாதியில் இன்று (நவம்., 30ல்) குருபூஜை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30நவ 2018 12:11
மங்கலம்பேட்டை : முகாசபரூர் கோரக்க சித்தர் ஜீவ சமாதியில் இன்று (நவம்., 30ல்) குருபூஜை விழா நடக்கிறது. மங்கலம்பேட்டை அடுத்த முகாசபரூர் அன்னபூரணி உடனுறை விஸ்வநாதர் கோவில் வளாகத்தில் உள்ள கோரக்க சித்தர் ஜீவ சமாதியில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் குருபூஜை நடைபெறுவது வழக்கம்.
அதேபோன்று இந்த ஆண்டு கார்த்திகை மாத குருபூஜை விழா இன்று 29ம் தேதி நடக்கிறது. இதையொட்டி காலை 5:00 மணிக்கு கோ பூஜை, 6:00 மணிக்கு பால்குடம் ஊர்வலம், 10:00 மணிக்கு மகா யாகம், 11:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 12:00 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது.