பதிவு செய்த நாள்
30
நவ
2018
01:11
தர்மபுரி: ராஜாதோப்பு பெரிய முனீஸ்வரர் கோவிலில் நடந்த, கும்பாபிஷேக விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தர்மபுரி அடுத்த, ராஜாதோப்பில் பெரிய முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த, 28ல் காலை, 9:00 மணிக்கு, விக்னவிநாயக, பெருமாள் வழிபாடு, மஹா கணபதி ஹோமத்துடன் துவங்கியது.
தொடர்ந்து, காப்பு கட்டுதல், தீர்த்தக்குடம் எடுத்தல், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. நேற்று (நவம்., 29ல்) காலை, 8:00 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜை, 180 மூலிகை மூலிகை திரவிய ஹோமம் நடந்தது. காலை, 11:30 மணிக்கு, மஹா கும்பாபிஷேகம், சுவாமிக்கு கண் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், திரளான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.