பதிவு செய்த நாள்
30
நவ
2018
01:11
ஊத்துக்கோட்டை:பக்தர்கள் பங்களிப்புடன் கட்டப்பட்ட, பொன்னிஅம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில், திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.எல்லாபுரம் ஒன்றியம், தண்டலம் ஊராட்சியில் உள்ளது, தேவி பொன்னியம்மன் கோவில். இக்கோவில் சிதிலமடைந்து காணப்பட்டது. பக்தர்கள் பங்களிப்புடன் கோவில் சீரமைக்கும் பணி நடந்து முடிந்து
கும்பாபிஷேகம் நடந்தது.விழாவின் முக்கிய நாளான, நேற்று, (நவம்., 29ல்)காலை, 5:00 மணிக்கு, யாகசாலை பூஜை ஆரம்பம், யாத்ரா தானம் கடம் புறப்படுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.
தொடர்ந்து, காலை, 8:00 மணிக்கு விமான கும்பாபிஷேகம், மூலஸ்தானம் கும்பாபிஷேகம் ஆகியன நடந்தன. இதில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.காலை, 10:00 மணிக்கு, அம்மனுக்கு மகா அபிஷேகம் நடந்தது. இரவு, 7:00 மணிக்கு, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.