பதிவு செய்த நாள்
01
டிச
2018
12:12
திருவண்ணாமலை, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நவ., 23ல், 2,668 அடி உயர மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட்டது. இத் தீபம், நாளை மறுநாள்(டிசம்., 3ம்)தேதி வரை தொடர்ந்து எரியும்.
இந்நிலையில், மஹா தீபம் அணைந்துவிட்டதாக, கடந்த இரண்டு நாட்களாக வாட்ஸ் ஆப் உட்பட சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது. இதனால், வேலூர் மாவட்டம் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதியில் வசிப்பவர்கள், தங்களது வீட்டு வாசலில் விளக்கேற்றி வழிபட்டு வருகின்றனர்.
இது குறித்து, திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி. சிபி சக்கரவர்த்தி கூறியதாவது. -மஹா தீபம் அணையவில்லை. தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது. நாங்கள் கண்காணித்து வருகிறோம். இதுபோன்ற தவறான தகவல்களை, சமூக வலைதளங்களில் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.