பதிவு செய்த நாள்
01
டிச
2018
12:12
பெரியகுளம்: பெரியகுளம் வராக நதி கரையோரம் ஞானம்பிகா சமேத காளஹஸ்தீஸ்வரர் கோயில் 800 ஆண்டு தொன்மை வாய்ந்தது. திருப்பதி அருகே காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் இருந்து பிடிமண் எடுத்து வந்து இந்தகோயில் உருவானது. ஏழுமலையான் அருகே காளஹஸ் தீஸ்வரர் அமைந்தது போல், இங்கும் வரதராஜப்பெருமாள் கோயில் அருகே இக்கோயில் அமைந்துள்ளது கூடுதல் சிறப்பு.மூலவர்களாக காளஹஸ்தீஸ்வரரும், ஞானம்பிகையும், பரிவார தெய்வங்களாக ராஜகணபதி, கார்த்திகேயன், விஷ்ணுகணபதி, துர்கா, லட்சுமி,
சரஸ்வதி, வள்ளி, தெய்வானையுடன் சிவசுப்பிரமணியன், நடராஜர் உள்ளிட்டோர் உள்ளனர். நவக்கிரஹம், சூரியன், சந்திரன், நந்தீஸ்வரர்கள் மற்றும் ராகு, கேதுவிற்கு தனி சன்னதி உள்ளது.
கன்னிமூல கணபதிக்கு விரைவில் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இக்கோயிலை நாடி வரும் பக்தர்களுக்கு தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்கும்.
குழந்தைபேறு உட்பட சகலஐஸ்வர்யம் கிடைக்கும் என்பது நம்பிக்கை., வேண்டியவருக்கு வேண்டும் வரம் தரும் வள்ளலாக காளஹஸ்தீஸ்வரர் திகழ்கிறார். தினமும் காலை 7:00 மணி முதல் 11:00 மணி மற்றும் மாலை 5:00 மணி முதல் 8:00 மணி வரை நடைதிறந்திருக்கும். இரு
வேளை பூஜை நடந்து வருகிறது. பிரதோஷ சிறப்பு வழிபாடும், தேய்பிறை அஷ்டமியன்று சேத்ரபாலபைரவருக்கு ஹோமத்துடன் பூஜை நடக்கிறது.
சதுர்த்தி, கந்த சஷ்டி, திருக்கார்த்திகை உள்ளிட்ட விழாகளில் சிறப்பு பூஜைகள், ராகு, கேதுவுக்கு நாகதோஷம், செவ்வாய் தோஷம் பரிகார பூஜை நடக்கிறது.
அர்ச்சகர் கணேசன் கூறுகையில், "இக்கோயிலிக்கு வரும் பக்தர்களுக்கு மனம், உடல், மேன்மை பட்டு, சகல சம்பத்துகளும் கிடைத்து வருகிறது. காளஹஸ்தீஸ்வரர், அவர்களின் கண்களுக்கும், மனதிற்கும் பேசும்தெய்வமாக அருள்பாலிக்கிறார். பக்தர்களுக்கு நிறைகளை அள்ளித்தருவதே அவரின் மகிமை, என்றனர்.விபரங்களுக்கு: 99407 85335