Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முக்கிய தீர்த்தங்களும் சிறப்பும்! முக்கிய தீர்த்தங்களும் சிறப்பும்! உழவாரப்பணி என்பதன் பொருள் என்ன? உழவாரப்பணி என்பதன் பொருள் என்ன?
முதல் பக்கம் » துளிகள்
ஏகாதசி விரதம் இருப்பது ஏன்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 டிச
2018
16:00

ஏகாதசி விரதத்தை மிக தீவிரமாக நமது ஆகமங்கள் வலியுறுத்துகின்றன. பத்ம புராணம் 14 வது அத்தியாயம் ஏகாதசியை பற்றி விளக்குகிறது

‘ ந காயத்ர்யா: பரம் மந்த்ரம் ந மாது: பர தைவதம்
ந காச்யா: பரமம் தீர்த்தம் நைகாதச்யா: ஸமம் வ்ரதம் ‘

‘காயத்ரிக்கு மேலே ஒரு  மந்திரமில்லை ; தாய்க்கு  மேலே  ஒரு தெய்வமில்லை  . காசிக்கு மேலே ஒரு புண்ணிய தீர்த்தம் இல்லை. ஏகாதசிக்கு சமமாக  ஒரு விரதம் இல்லை. கூர்ந்து கவனித்தோமானால் மற்ற மூன்றுக்கும் மேலே ஓன்று இல்லை என்று சொல்லும் போது, சமமாக ஓன்று இருக்கலாம் என்று படுகிறது. ஆனால் ஏகாதசிக்கு மேலே மட்டுமல்ல சமமாக கூட  ஒன்றும் இல்லை எனும் போது அது தலையாய ஒன்று என்பது வலியுறுத்தப்படுகிறது.

‘ ஏகாதச்யாம் து கர்தவ்யம் ஸர்வேஷாம் போஜன த்வயம்
சுத்தோபவாஸ: ப்ரதம: ஸக்கதா ச்ரவணம் தத:‘

ஏகாதசி என்றால் என்ன?

ஏகம் + தசம் = ஒன்று+ பத்து = பதினொன்று அதாவது பவுர்ணமிக்குப் பிறகு பதினோராவது நாளும், அமாவாசைக்கு பிறகு பதினோராவது நாளும் ஏகாதசி எனப்படுகிறது. இதில் அமாவாசைக்கு பிறகு வருகிற ஏகாதசி சுக்கில பக்ஷம் என்றும், ங்சுக்கிலம் என்றால் ஒளி, பவுர்ணமி ஒளி அல்லவாசி, பவுர்ணமிக்கு பிறகு வருகிற ஏகாதசி கிருஷ்ண பக்ஷம் ங்கிருஷ்ண என்றல்ல கருப்பு நிறம், அமாவாசை கருப்புசி  என்றும் அழைக்கப்படும் ஆக வருடத்திற்கு 24 ஏகாதசிகள்.

இந்த விரதத்தை யார் செய்ய வேண்டும்?

‘அஷ்ட வர்ஷாதிக: மர்த்ய: அபூர்ணாசீதி வத்ஸர
ஏகாதச்யாம் உபவஸேத் பக்ஷயோ: உபயோ: அபி ‘

என்று தர்ம சாஸ்திரம்   கூறுகிறது. அதாவது மனிதராகப் பிறந்தவர்களில் எட்டு வயதிற்கு மேல் எண்பது வயதிற்கு உட்பட்ட எல்லோரும்  ஏகாதசிகளில் உபவாஸம் இருக்க வேண்டும். ஆணா பெண்ணா, எந்த ஜாதி  என்ற வித்தியாசமில்லாமல் , ‘மர்த்ய’, அதாவது  மனிதராக ப் பிறந்த எல்லோரும் ஏகாதசி விரதம் இருக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும்  ஒரு விலக்கு உண்டு அல்லவா. அப்படி ஏகாதசி விரதத்தை நான்கு முறைகளில் செய்யலாம்.

1. நிர்ஜல விரதம்ஏகாதசியில் நிர்ஜலமாயிருந்தால் ரொம்பவும் உத்தமமானது. பச்சை தண்ணி கூட அருந்தாமல் விரதம் இருப்பது.
2. சாத்விக ஜல உபவாசம்: தண்ணீர், பசும் பால் மட்டும்.
3. வாழைப்பழத்தோடு பால் சாப்பிடுவது.
4.  ஒருவேளை மட்டும் பத்துப்படாத  பூரி, சப்பாத்தி ங்உப்பில்லாமல்சி மாதிரியானவற்றைச் சாப்பிட்டு இன்னொரு வேளை பழம், பால்.

ஏகாதசி திதி (முக்கியமாக வைகுண்ட ஏகாதசி) நாட்களில் தாய், தந்தைக்கு சிரார்த்தம் (நினைவுநாள்) வந்தால் அன்று நடத்தாமல் மறுநாள் துவாதசியன்று நடத்த வேண்டும். அன்று கோயில்களில் தரப்படும் பிரசாதத்தைக் கூட சாப்பிடக்கூடாது. மறுநாள் துவாதசி அன்று அகத்திக் கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் இப்படி ஏதாவது அவசியம் இடம்பெற வேண்டும். துவாதசியன்று காலையில் சாப்பிட்ட பிறகு பகலில் உறங்கக்கூடாது. முக்கியமாக  ஏகாதசி விரதத்தின் போது எக்காரணம் கொண்டும் துளசி பறிக்கக்கூடாது. பூஜைக்கான துளசியை முதல் நாளே பறித்து விடவேண்டும்.

ஏகாதசி விரதம் ஏன் ?

தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், மானிடர்களுக்கும் மிகுந்த தொல்லை அளித்து வந்தான் முரன் என்னும் அசுரன். இதனால் அவனை அழித்து தங்களை காக்குமாறு ஈசனை துதித்தனர். அவர்களை மகாவிஷ்ணுவை சரணடையக் கூறினார் சிவபெருமான். அதன்படி அனைவரும் விஷ்ணுவை சரணடைந்தனர். அவர்களை காக்க எண்ணிய மகாவிஷ்ணு, அந்த அசுரனோடு போர் புரியத் தொடங்கினார். போர் 1000 ஆண்டுகள் கடுமையாக நீடித்தது. அதன் பிறகு மிகவும் களைப்படைந்தவராய் மகாவிஷ்ணு பத்ரிகாஸ்ரமத்தில் உள்ள ஒரு குகையில் படுத்து ஓய்வெடுத்தார். அந்த நேரத்தை தனக்கு சாதகமாக்கி கொண்டு, ’முரன்’ பகவானை கொல்லத் துணிந்த போது, அவருடைய திவ்ய சரீரத்தில் இருந்து அவருடைய சக்தி ஒரு பெண் வடிவில் வெளிப்பட்டது. இவளை அசுரன் நெருங்கிய வேளையில் அவளிடம் இருந்து வெளிப்பட்ட ஓங்காரமே, அசுரனை எரித்து சாம்பலாக்கியது. விழித்தெழுந்து நடந்ததைக் கண்ட நாராயணன், அந்த சக்திக்கு “ஏகாதசி” எனப் பெயரிட்டு உன்னை விரதம் இருந்து போற்றுவோருக்கு நான் சகல நன்மைகளையும் தருவேன் என வரமளித்து தன்னுள் மீண்டும் சக்தியை ஏற்றுக்கொண்டார். எனவே ஏகாதசி எனும் சக்தி விழிப்புடன் இருந்து நாராயணனின் அருளும் வரமும் பெற்ற ஏகாதசி நாளில் நாமும் கண்விழித்து விரதம் கடைபிடித்தால் அவரின் அருள் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று நீங்காப் புகழுடன் வாழ்வோம் என்பது ஐதீகம்.

ஒரு தடவை யமராஜன் நாராயணனிடம் எல்லோரும் ஏகாதசி விரதம் இருப்பதால் எங்களுக்கு வேலை  இல்லை என்று கூறினார். உடனே நாராயணன் பாபபுருஷனை அனுப்பி ஏகாதசி அன்று உண்ணும் உணவிலெல்லாம் நீ இருப்பாயாக என்று வாக்கு கொடுத்தார். எனவே ஏகாதசி அன்று உண்ணும் உணவு பாவ மூட்டையாக கருதப்படுகிறது.

 
மேலும் துளிகள் »
temple
அம்பாளுக்கு ஆயிரம் கண்கள் கொண்டவள் என்னும் பொருளில் ’சகஸ்ராக்ஷி’ என்று பெயருண்டு. அதாவது ... மேலும்
 
temple
ஆட்டு மந்தையை விரட்டிக் கொண்டிருந்தான் மேய்ப்பவன் ஒருவன். அதில் ஒரு குட்டியின் காலில் மட்டும் ... மேலும்
 
temple
குறையில்லா வாழ்வு பெற ராகவேந்திரர் போற்றியை படியுங்கள்

ஓம் சத்குரு ராகவேந்திரரே போற்றி
ஓம் ... மேலும்
 
temple
ஒவ்வொரு முறையும் பக்தர்களை காக்க மகாவிஷ்ணு ஏதாவது ஒரு அவதாரம் எடுப்பது வழக்கம். ஆனால் தாயின் கருவில் ... மேலும்
 
temple

ஆறுமுகனின் ஆணை மார்ச் 26,2019

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை முருகன் கோயிலின் திருப்பணியில் கருப்பமுத்து என்பவர் வேலை செய்தார். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.