பதிவு செய்த நாள்
11
டிச
2018
01:12
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு அடுத்த நல்லட்டிபாளையம் கோவில் திருவிழாவில் சுற்றுப்பகுதி கிராம மக்கள் திரளாக பங்கேற்றனர்.கிணத்துக்கடவு அடுத்த நல்லட்டி பாளையத்தில் பிரசித்தி பெற்ற நஞ்சுண்டேஸ்வரர் கோவில் உள்ளது. கடந்த, 10 ஆண்டு களுக்கும் மேலாக, கார்த்திகை மாத கடைசி திங்கட்கிழமைகளில் நடக்கும் திருவிழாவும், சிறப்பு பூஜையும் கோவிலில் நடப்பதில்லை.
கார்த்திகை மாத கடைசி திங்கட்கிழமையான நேற்று (டிசம்., 10ல்) , கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள், பூட்டிய கதவுக்கு வெளியே, சூடமேற்றி சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். விழாவுக்காக, 100க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டிருந்தது.
பூஜை பொருட்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள், மற்றும் இனிப்பு, பலகார கடைகள் அமைக்கபப்ட்டிருந்தன. பொழுதுபோக்கு அம்சமாக, சாதாரண மற்றும் மின்சாரத் தில் இயக்கும் ராட்டினங்கள் அமைக்கப்பட்டிருந்தன. கிணத்துக்கடவு, தாமரைக்குளம் பகுதிகளில் இருந்து, சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.