கடலூர் மாவட்ட அய்யப்ப சேவா சங்கம் குரு மரியாதை பெருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11டிச 2018 01:12
பண்ருட்டி:கடலூர் மாவட்ட அய்யப்ப சேவா சங்கம் சார்பில் 15ம் ஆண்டு குருமரியாதை பெருவிழா நேற்று 10ல் காடாம்புலியூரில் நடந்தது.விழாவையொட்டி காலை 8:00 மணிக்கு கொஞ்சிக்குப்பம் ஐயனார் கோவிலில் இருந்து ஊர்வலம் பிரம்மரிஷிமலை சுந்தரமகாலிங்க சுவாமிகள் முன்னிலையில் துவங்கியது.
ஆந்திரா மாநிலம் பூதலப்பட்டு சங்கர சுவாமிகள் 15ம் ஆண்டு குருமார்கள் லட்சார்ச்சனையை துவக்கி வைத்தார்.சபரிமலை சன்னிதானத்தில் மேல்சாந்தி (2012-13) தாமோதரன போத்தி அய்யப்பன் பூஜை துவக்கி வைத்து ஆசீர்வாதம் வழங்கினார்.
மாலை 3:00 மணிக்கு துவங்கிய விழாவிற்கு மாவட்ட தலைவர் யாகமூர்த்தி தலைமை தாங்கினார். உயர்மட்ட குழு தலைவர் வாசுதேவன், முதன்மை வன பாதுகாவலர் அண்ணாமலை முன்னிலை வகித்தனர்.மாவட்ட துணைச் செயலர் சுப்ரமணியம், செயலர் சுவாமிநாதன் வரவேற்றனர். விழாவில் திருவனந்தபுரம் அகில பாரத அய்யப்ப சேவா சங்க பொதுச் செயலர் வேலாயுதன் நாயர், அகில பாரத அய்யப்ப சங்க பொருளாளர் மேனன் சிறப்புரையாற்றினர்.மாநில கவுரவ தலைவர் ராஜேந்திரன், மாநில தலைவர் விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.