கண்டாச்சிபுரத்தில் ராமநாதீஸ்வரர் கோவிலில் சங்காபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11டிச 2018 01:12
கண்டாச்சிபுரம்:கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் 4வது சோமவாரத்தையொட்டி சங்காபிஷேக பூஜைகள் நடைபெற்றது.
கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில்,4வது சோமவார சங்காபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக காலை 10:00 மணிக்கு முதாலாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. மாலை இரண்டாம் கால யாகசாலை பூஜையும், பூர்ணாஹூதி நடைபெற்றது. பின்னர் கலசம் ஊர்வலத்தை தொடர்ந்து மூலவர் ராமநாதீஸ்வரருக்கும்,ஞானாம்பிகை அம்மனுக்கும் அபிஷேகம் நடைபெற்றது. ஏளாளமான பக்தர்கள் சுவாமிகளை தரிசனம் செய்தனர்.