சின்னசேலம்:சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கார்த்திகை சோம வாரத்தையொட்டி நெல்லி, துளசி செடிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கார்த்திகை நான்காவது சோமவாரத்தை முன்னிட்டு நெல்லி மற்றும் துளசி செடிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
இதில் விஷ்ணு, துளசி, சிவன் ஸ்தோத்திரங்களை பாராயனம் செய்து பூஜைகளை செய்தனர். இச்சிறப்பு பூஜைகளை ஜெயக்குமார் சுவாமிகள் செய்து வைத்தார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சின்னசேலம் மகிளா சங்க தலைவி அகிலா, செயலர் ஹேமலதா, பொருளாளர் மாதேஸ்வரி உட்பட வாசவி, வனிதா கிளப் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.இதேபோல், சின்னசேலம் அடுத்த உலகியநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கார்த்திகை சோமவார சிறப்பு பூஜைகள் நடந்தது.