பதிவு செய்த நாள்
11
டிச
2018
01:12
பந்தலூர்:பந்தலூரில் நடந்த புனித பிரன்சீஸ் சவேரியார் ஆலய திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.சவேரியார் ஆலயத்தில், கடந்த, 2 காலை, 9:30 மணிக்கு மறை மாவட்ட பொருளாளர் செல்வநாதன் தலைமையில் கொடியேற்றத்துடன் துவங்கிய திருவிழாவில் தினசரி மாலை 5:00 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி, மறையுரை நிகழ்ச்சிகள் நடந்தன.
நிறைவு நாள் நிகழ்ச்சியில் காலை ஆயர் அமல்ராஜ் வரவேற்க்கப்பட்டு, அவர் தலைமையில் திருவிழா திருப்பலி நடந்தது. தொடர்ந்து குழந்தைகளுக்கு புதுநன்மை வழங்குதல், உறுதி பூசுதல், திருவருட்சாதனங்கள் வழங்கல் நிகழ்ச்சிகள் நடந்தது.பகல், 12:00 மணிக்கு அன்பின் விருந்தும் மாலை 5.30மணிக்கு கோவை மறைமாவட்ட வினோத் தலைமையில் திருப்பலியும், அதனையடுத்து தேர்பவனியும், நற்கருணை ஆசிரும் நடத்தப்பட்டது.தேர் திருவிழாவில் பவனி வந்த சவேரியார் சிலைக்கு, பக்தர்கள் உப்புகளை வீசி தங்கள் நேர்த்திகடனை செலுத்தினர். ஏற்பாடுகளை பாதர் வில்சன் தலைமையில் பங்கு மக்கள், கமிட்டியினர் செய்திருந்தனர்.