நடுவீரப்பட்டு:விலங்கல்பட்டில் ஐயப்பன் சுவாமிகளின் கன்னி பூஜை விழா நடந்தது.நடுவீரப்பட்டு அடுத்த விலங்கல்பட்டு கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் நேற்று (டிசம்., 16ல்) மதியம் ஐயப்பன் சுவாமிகளின் கன்னி பூஜை நடந்தது.
விழாவை முன்னிட்டு நேற்று (டிசம்., 16ல்) காலை 10:00 மணிக்கு மாரியம்மன் கோவிலில் உள்ள ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. அதனை தொடர்ந்து சபரி மலைக்கு மாலை அணிந்த பக்தர்கள் ஐயப்பனை வழிபட்டு, கன்னி பூஜை நடத்தினர். ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.