அன்னூர் மார்கழி முதல் நாள் வழிபாடு: திரளான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17டிச 2018 01:12
அன்னூர்:மார்கழி மாதம் இறைவனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. மார்கழி முதல் நாளான நேற்று (டிசம்., 16ல்), அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 4:30 மணிக்கு அபிஷேக பூஜையும், 5:30 மணிக்கு அலங்கார பூஜையும் நடந்தது. மன்னீஸ்வரர், அருந்தவச்செல்வி அம்மன் சன்னதிகளில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், காலை 5:00 மணிக்கு அபிஷேக பூஜையும், 6:30 மணிக்கு அலங்கார பூஜையும் நடந்தது. மொண்டிபாளையம் வெங்கேடேசப் பெருமாள் கோவிலில் அதிகாலையில் அபிஷேக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தது.
சூலூர் ஒன்றியம், சோமனூர் அருகில் உள்ள குமாரபாளையம் சவுடேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நேற்று (டிசம்., 16ல்) முதல் மார்கழி மாத சிறப்பு பூஜை துவங்கி உள்ளது.