பழநியில் குவிந்த பக்தர்கள் மூன்று மணிநேரம் காத்திருப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17டிச 2018 01:12
பழநி : விடுமுறை நாளான நேற்று (டிசம்., 16ல்) பழநியில் பக்தர்கள் குவிந்தனர். ஆக்கிரமிப்புகளால் அவர்கள் அவதியடைந்தனர்.
மார்கழி மாதப்பிறப்பை யொட்டியும், நேற்று விடுமுறை தினம் என்பதாலும் நேற்று (டிசப்., 16ல்) அதிகாலை 4:00 மணி முதலே பக்தர்கள் பழநியில் குவிந்தனர். அவர்கள் ரோப்கார், வின்ச் ஸ்டேசனில் இரண்டு மணிநேரம் காத்திருந்து மலைக்கோயில் சென்றனர். மலைக்கோயில் பொதுதரிசனம் வழியில் 3 மணிநேரம் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். தங்கரதப் புறப்பாட்டை காணவும் ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.
ஆக்கிரமிப்புகளால் நெரிசல்சபரிமலை சீசன் காரணமாக தடைசெய்யப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்துவது அதிகரித்துவிட்டது. இதனால் நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, கிரிவீதியை வலம் வரும் பக்தர்களும் பாதிக்கப்படுகின்றனர். சன்னதிவீதி, அய்யம் புள்ளிரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், தொடர்ந்து கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.