பதிவு செய்த நாள்
17
டிச
2018
01:12
திண்டுக்கல் : திண்டுக்கல், பழனி கோயில்களில் மார்கழி மாத சிறப்பு பூஜை நடந்தது. திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது.
விளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். அபிராமி அம்மன் கோயில், மலையடி வாரம் சீனிவாச பெருமாள், தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள்கோயில், ரயிலடி சித்தி விநாயகர், நன்மை தரும் 108 விநாயகர், கூட்டுறவு நகர் விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.பழநிமார்கழி மாதபிறப்பை முன்னிட்டு, பழநி முருகன் மலைக் கோயிலில் சிறப்பு யாகபூஜை வழிபாடு நடந்தது. மார்கழி தானுர் மாதபிறப்பை முன்னிட்டு, பழநி மலைக்கோயில் அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. ஆனந்த விநாயகருக்கு கும்பகலசங்கள் வைத்து, கணபதி ஹோமத்துடன், யாகபூஜை நடந்தது.
விநாயகருக்கு கலசநீர் அபிஷேகம் செய்து, லட்டு படைக்கப்பட்டு, வெள்ளிக்கவச அலங்காரம், தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கினர்.இதேபோல திருஆவினன்குடி கோயில், பெரியநாயகியம்மன் கோயில், லட்சுமி நாராயணப்பெருமாள் கோயில், பெரியாவுடையார் கோயில் உள்ளிட்ட கோயில்களில், பெருமாள், அம்மன், சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரத்தில், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.