Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், ... மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) குருவால் குறை தீரும் மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) ஆன்மிக சுற்றுலா
எழுத்தின் அளவு:
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) ஆன்மிக சுற்றுலா

பதிவு செய்த நாள்

18 டிச
2018
11:12

இந்த மாதம் 3-ம் இடத்தில் இருக்கும் செவ்வாய் டிச.17 வரை நற்பலன் கொடுப்பார். மேலும் தற்போது துலாம் ராசியில் இருக்கும் சுக்கிரனால் ஜன.1 வரை நன்மை கிடைக்கும். சூரியன் 12-ம் இடத்தில் இருந்து உங்கள் ராசிக்கு வந்தாலும் நன்மை பெற முடியாது. புதன் டிச.29ல் உங்கள் ராசிக்கு வந்தாலும் சுமாரான பலனே கிடைக்கும்.   

வீட்டிற்கு வெளியில் ஆயிரம் பிரச்னை இருந்தாலும் குடும்பத்தில் நிம்மதி பெருமூச்சு விடலாம். மனைவி மற்றும் குடும்பத்தினரைக் கண்டதும் துன்பம் அனைத்தும் பறந்தோடும். சொந்தபந்தங்களின் வருகை அடிக்கடி இருக்கும். டிச.16,17ல் குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள்.  ஜன.5,6ல் பெண்கள் உங்களுக்கு உதவிகரமாக செயல்படுவர்.  அவர்களால் பணஉதவி கிடைக்கும்.  பொன், பொருள் சேரும். விருந்து, விழா என செல்ல வாய்ப்புண்டு. டிச.31, ஜன.1ல் உறவினர் வகையில் மனக்கசப்பு வரலாம். எனவே சற்று ஒதுங்கி இருக்கவும். ஆனால் டிச.16,17,ஜன.12,13ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். கேதுவால் சிலருக்கு பொருள் திருட்டு ஏற்படலாம். டிச.28க்கு பிறகு  அண்டை வீட்டாருடன் கருத்துவேறுபாடு வரலாம் கவனம்.

பணியாளர்களைப் பொறுத்த வரையில் காவல், ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு டிச.16,17ல் கோரிக்கைகள் நிறைவேறும். தனியார் துறையில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். அதிகாரிகளிடம் அனுசரித்துப் போவது நல்லது.  முயற்சி எடுத்தால் மட்டுமே கோரிக்கைகள் நிறைவேறும்.  டிச.28க்கு பிறகு சிலர் இடமாற்றத்திற்கு ஆளாவர். இது எதிர்கால வளர்ச்சிக்கு வழிவகுக்கும். டிச.29,30 நன்மை தரும் நாட்களாக அமையும். அரசு வேலையில் இருப்பவர்கள் வேலையில் கூடுதல் கவனம் செலுத்தவும்.   

தொழில், வியாபாரத்தில் புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் வீண்அலைச்சல், பகைவர் தொல்லைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். புதிய தொழில் முயற்சியை தவிர்க்கவும். பணவிஷயத்தில் அறிமுகம் இல்லாதவர்களை நம்ப வேண்டாம். புதிதாக முதலீடு செய்வதை தவிர்க்கவும். ஜன.2,3,4,7,8,9ல் சந்திரனால் தடைகள் வரலாம். ஆனால் டிச.20,21,22ல் எதிர்பாராத வகையில் வருமானம் கிடைக்கும்.  கலைஞர்களுக்கு சுக்கிரன் சாதகமாக இருப்பதால்  முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.  வருமானம் அதிகரிக்கும். ஜன.1க்கு பிறகு முயற்சியில் தடை குறுக்கிடலாம். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்களுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்காது. பலன் கருதாமல் உழைக்க வேண்டியதிருக்கும்.

மாணவர்களுக்கு  இந்த மாதத்தை பொறுத்தவரை புதன் சாதகமற்ற நிலையில் உள்ளது. படிப்பில் அசட்டையாக இருந்து விட வேண்டாம். சிரத்தை எடுத்து படிப்பது அவசியம். விவசாயிகள் சீரான பலன் கிடைக்கப் பெறுவர். கேழ்வரகு, சோளம், காய்கறி, பழவகைகள் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும்.   கறுப்பு நிற தானியங்கள் பயிரிடுவதை தவிர்க்கவும் கால்நடை வகையில் எதிர்பார்த்த லாபம் பெற இயலாது.  

பெண்களால் குடும்பத்திற்கு பெருமை உண்டாகும். வேலைக்கு செல்லும் பெண்கள் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு சுமாராகவே இருக்கும். கோரிக்கைகள் நிறைவேறாமல் போக வாய்ப்புண்டு. பணியிடத்தில் பொறுமை, நிதானம் அவசியம்.

சிலர் திடீர் இடமாற்றத்திற்கு ஆளாவர். டிச.16,17ல் இனிய அனுபவம் உண்டாகும். ஜன. 10,11ல் பெற்றோர் வீட்டில் இருந்து உதவி கிடைக்கப் பெறலாம். டிச. 23,24 சிறப்பான நாட்களாக அமையும். விருந்து, விழாவில் பங்கேற்க வாய்ப்புண்டு.  

* நல்ல நாள்: டிச.20, 21, 22, 23, 24, 29, 30, 31, ஜன.1, 5, 6, 10, 11கவன நாள்: டிச.25, 26 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 1, 2
* நிறம்: ஊதா, வெள்ளை

பரிகாரம்:
●  சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம்
●  செவ்வாயன்று முருகன் வழிபாடு
●  சுவாதியன்று நரசிம்மருக்கு பானகம்

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar