Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) ... கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) அரசு வகையில் அனுகூலம் கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) குருவால் குறை தீரும்
எழுத்தின் அளவு:
மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) குருவால் குறை தீரும்

பதிவு செய்த நாள்

18 டிச
2018
11:12

இந்த மாதம் புதன் டிச.28 வரையும், சுக்கிரன் ஜன.1க்கு பிறகும் சாதகமான இடத்தில் இருந்து நற்பலன் தருவர். செவ்வாய் டிச 17ல் மீன ராசிக்கு வருகிறார். இதனால் நன்மை மேலோங்கும். மேலும் குரு மாதம் முழுவதும் நன்மை தரக் காத்திருக்கிறார். அவரால் குறையனைத்தும் தீரும். உங்கள் ராசிக்கு 1ல் உள்ள கேது, 7ல் உள்ள ராகு, 12ல் உள்ள சூரியன், சனி ஆகியோரால் சுமாரான பலனே கிடைக்கும்.

குடும்பத்தில் கணவன், மனைவி இடையே அன்பு பெருகும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். புதிய வீடு, மனை வாகனம் வாங்க யோகம் கூடி வரும். ஆடம்பர பொருட்களை வாங்க வாய்ப்புண்டு. சகோதரிகள் மிக உதவிகரமாக செயல்படுவர். குறிப்பாக ஜன.7,8,9ல் அவர்களால் கூடுதல் நன்மை எதிர்பார்க்கலாம். ஜன.2,3,4ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் டிச.18,19, ஜன.14ல் அவர்கள் வகையில் கருத்துவேறுபாடு ஏற்படலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். செவ்வாயால் குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள்.

பணியாளர்கள் சிறப்பான வளர்ச்சி காண்பர். அரசு ஊழியர்கள் பணியில் மேன்மை காண்பர். தனியார் துறையில் வேலைபார்ப்பவர்களுக்கு புதிய பதவி தேடி வரும். டிச.31, ஜன.1 ல் எதிர்பாராத நன்மை கிடைக்கும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம். சூரியனால் பணவிரயமாகலாம்.


இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.  டிச.28க்கு பிறகு வேலைப்பளு அதிகரித்தாலும் அதற்குரிய வருமானம் கிடைக்கும். அதிக சிரத்தை எடுத்தால் மட்டுமே கோரிக்கை நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் குரு மற்றும் புதனால் முன்னேற்றம் பெறும் மாதமாக அமையும். ஆன்மிக சம்பந்தப்பட்ட மற்றும் பூஜை பொருட்கள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபம் அடைவர். ஜன.5,6,10,11ல் சந்திரனால் சிறு தடைகள் வரலாம். ஜன.1,2ல் எதிர்பாராத வகையில் வருமானம் வரும். பகைவரை எதிர்த்து வெல்லும் ஆற்றல் பிறக்கும். டிச.28க்கு பிறகு வீண்செலவு அதிகரிக்கும். பணவிஷயத்தில் கவனமாக இருக்கவும். ராகுவால் அலைச்சல் அதிகரிக்கும். சிலர் தீயோர் சேர்க்கையால் அவதிப்படலாம்.

கலைஞர்களுக்கு   ஜன.1க்கு பிறகு முயற்சியில் குறுக்கிட்ட தடையனைத்தும் விலகும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ரசிகர்களின் மத்தியில் புகழ், பாராட்டு கிடைக்கும். தொழில்ரீதியான வெளியூர் பயணம் வெற்றி பெறும்.அரசியல் வாதிகள், பொதுநல சேவகர்கள் நன்மையை எதிர்பார்க் கலாம். ஆனால் டிச.20,21,22ல் மனக்குழப்பம் ஏற்பட்டு மறையும்.

மாணவர்கள் ஆசிரியரின் அறிவுரையை பின்பற்றி முன்னேற்றம் காண்பர். புதன் சாதகமான இடத்தில் இருப்பதால் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும். போட்டிகளில் பங்கேற்று வெற்றியடைவர். டிச.28க்கு பிறகு நட்பு விஷயத்தில் விழிப்புடன் இருக்கவும்.  

விவசாயிகள் கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த பலன் கிடைக்கப் பெறுவர். கடலை, கிழங்கு, பயறு வகைகள், பழ வகைகள் மூலம் நல்ல வருமானம் அடைவர்.  சிலர் நவீன விவசாயத்தை பயன்படுத்தி அதிக மகசூல் பெறுவர். புதிய சொத்து வாங்கும் எண்ணம் சாத்தியமாகும். வழக்கு, விவகாரங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். இழந்த சொத்துக்கள் மீண்டும் கைக்கு வரும். டிச.28க்கு பிறகு கால்நடை வளர்ப்பில் செலவு அதிகரிக்கும்.

பெண்கள் வாழ்வில் சிறப்படைவர்.  கணவர் மற்றும் குடும்பத்தாரின் மத்தியில் மதிப்பு உயரும். வேலைக்கு செல்லும் பெண்கள் வளர்ச்சியடைவர். டிச.25,26 சிறப்பான நாட்களாக அமையும். சகோதர வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். டிச. 16,17, ஜன.12,13ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து சீதனம் வரப் பெறலாம். டிச.28க்கு பிறகு குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். ஜன.1க்கு பிறகு சுக்கிரனால் நன்மை உண்டாகும். உடல்நலனை பொறுத்தவரை, டிச.28க்கு பிறகு சற்று அக்கறை தேவை. வயிறு தொடர்பான பிரச்னை வரலாம்.

* நல்ல நாள்: டிச.16, 17, 23, 24, 25, 26, 31, ஜன.1, 2, 3, 4, 7, 8, 9, 12, 13
* கவன நாள்: டிச.27, 28 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 1, 9
* நிறம்: மஞ்சள், சிவப்பு

பரிகாரம்:
●  தினமும் காலையில் நீராடி சூரிய நமஸ்காரம்
●  ஞாயிறன்று ராகுகாலத்தில் பைரவர் வழிபாடு
●  பிரதோஷத்தன்று நந்தீஸ்வரருக்கு அருகம்புல்

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar