பதிவு செய்த நாள்
18
டிச
2018
01:12
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை, 4:00 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு, சிறப்பு பூஜை நடக்கிறது.கிணத்துக்கடவு அடுத்த சொலவம்பாளையம், செட்டிக்கபாளையம், அரசம்பாளையம், வடசித்துார், ஜக்கார்பாளையம் உள்ளிட்ட பகுதியில், கரிவரதராஜ பெருமாள் கோவில்களிலும், காட்டம்பட்டிபுதுாரில் ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் கரிவரதராஜ பெருமாள் கோவில்களிலும் வைகுண்ட ஏகாதசி விழா நேற்று துவங்கியது.விழாவையொட்டி பெருமாளுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தது. இன்று அதிகாலை, 4:00 மணிக்கு பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.வால்பாறைவால்பாறை அடுத்துள்ளது சோலையாறு எஸ்டேட் முதல்பிரிவிலுள்ள ஸ்ரீராமர் கோவிலில், மார்கழி மாத மகா உற்சவத்தையொட்டி சுவாமிக்கு அபிேஷக பூஜையும், சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது.விழாவில், நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. அதன்பின், ஸ்ரீராமர் சீதாதேவி, அனுமன் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.