பதிவு செய்த நாள்
27
டிச
2018
12:12
உடுமலை: உடுமலை, நவநீத கிருஷ்ண பெருமாள் கோவிலில், ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக உற்சவம் நேற்று நடந்தது.உடுமலை, பெரியகடை வீதி, நவநீத கிருஷ்ண சுவாமி கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா நடந்து வருகிறது. தினமும், பூமிநீளா நாயகி சமேத சீனிவாசப்பெருமாளுக்கு, திருமஞ்சனம் நடந்து வருகிறது. பல்வேறு அவதாரங்களில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.கடந்த, 18ம் தேதி, சொர்க்க வாசல் திறப்பை தொடர்ந்து, ராப்பத்து உற்சவம், திருவாய்மொழி திருநாள் உற்சவ நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. நேற்று, மாலை, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஸ்ரீராமர் பட்டாபிஷேக உற்சவம் நடந்தது.லட்சுமணர், ஆஞ்சநேயர் உடன் சீதா தேவி சமதே ஸ்ரீ ராமர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருவாய்மொழி, ஒன்பதாம் பத்து பாசுரங்கள் பாடப்பட்டன. இன்று, விஸ்வரூப தரிசனமும், நாளை நம்மாழ்வார் மோட்சம் நிகழ்ச்சியும் நடக்கிறது.