பதிவு செய்த நாள்
27
டிச
2018
12:12
கோவை: குறிச்சியில் அரவான் திருவிழா நாளை (டிச., 28) கொண்டாடப்படுகிறது. அப்பகுதியில், காலை, 10:00 முதல், இரவு, 12:00 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக, மாநகர போலீசார் அறிவித்துள்ளனர்.உக்கடத்தில் இருந்து பொள்ளாச்சி செல்லும் கனரக வாகனங்கள், ஆத்துப்பாலம், போத்தனுார் குறிச்சி பிரிவு, போத்தனுார் புதுப்பாலம் வழியாக செட்டிபாளையம் ரோடு வழியாக செல்ல வேண்டும்.உக்கடத்தில் இருந்து பொள்ளாச்சி செல்லும் இலகுரக வாகனங்கள், ஆத்துப்பாலம், போத்தனுார் குறிச்சி பிரிவு, போத்தனுார் ரயில்வே திருமண மண்டபம், சாரதா மில் ரோடு, தக்காளி மார்க்கெட் வழியாக பொள்ளாச்சி ரோட்டை அடைந்து, செல்ல வேண்டும்.பொள்ளாச்சியில் இருந்து கோவை வரும் கனரக வாகனங்கள், தற்போது வரும் மலுமிச்சம்பட்டி ரோடு, மதுக்கரை மார்க்கெட் ரோடு வழியாக பிள்ளையார்புரம் சந்திப்பு வழியாக சுகுணாபுரம், பாலக்காடு ரோடு, புட்டுவிக்கி ரோடு, சேத்துமா வாய்க்கால் செக்போஸ்ட் வழியாக உக்கடம் செல்ல வேண்டும்.இதே பாதையில் வரும் இலகுரக வாகனங்கள் பிள்ளையார்புரம் சந்திப்பு, சுகுணாபுரம் வழியாக செல்லலாம் அல்லது மதுக்கரை ரோடு வழியாக வந்து, மாச்சம்பாளையம் ரோடு, ஞானபுரம் சந்திப்பில் பாலக்காடு ரோட்டை அடைந்து செல்ல வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.