பதிவு செய்த நாள்
28
டிச
2018
11:12
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் சபரிமலையில் நடப்பது போல் மண்டல பூஜை, ஆராட்டுவிழா, பேட்டை துள்ளல் விமரிசையாக ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறது. கடந்த டிச.,18ல் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. நேற்று முன்தினம் காலை கணபதி ஹோமம், அஷ்டாபிஷேகம், தீபாராதனை, பூதபலி நடந்தது. மாலை பள்ளிவேட்டை புறப்பாடு நடத்தப்பட்டு இரவு 10:00 மணிக்கு சயன பூஜைகள் நடந்தது.
நேற்று காலை 4:00 மணிக்கு கோ பூஜையும், பள்ளி உணர்தல் நிகழ்விற்கு பின் காலை 9:30 மணிக்கு முத்துநாச்சியம்மன் கோயிலில் இருந்து ஐயப்ப பக்தர்கள் ஊர்வலமாக வண்ணப்பொடிகளை உடலில் பூசியவாறு பேட்டை துள்ளலுடன் ஆடிப்பாடி உற்சாகமாக வந்தனர். காலை 11:00 மணிக்கு உற்சவரை பல்லக்கின் மூலம் கோயிலின் பின்புறமுள்ள பஸ்மக்குளம் கொண்டு சென்று சரணகோஷம் முழங்க, கருடன் வட்டமிட்டவுடன் தாம்பூலத்தட்டில் வைத்து மஞ்சள் நீரால் ஆராட்டு விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் பஸ்மக்குளத்தில் புனித நீராடினர். பின்னர் மூலவருக்கு 18 வகையான மகா அபிஷேக ஆராதனை, உலக நன்மைக்கான கூட்டுவழிபாடு நடந்தது. சன்னிதானத்தின் முன்புறம் கொடியிறக்கம் செய்யப்பட்டு அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை தலைமை குருசாமி மோகன் சுவாமி, ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்ப சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.
விழாவில் மகாத்மாகாந்தி நகர் எம்.ஆர்.மருதுபாண்டியன், சூர்யா, நேருநகர் ஏ.வி.பிரபாகரன், ராமநாதபுரம் பி.ராஜமணிகண்டன், பி.பிரவின்குமார், முத்துக்குமார் அண்ட் பிரதர்ஸ், எஸ்.எம்.திருச்செந்தில் முருகன், எஸ்.எம்.கண்மணி ஸ்ரீ, வி.எஸ்.விக்னேஷ் ராஜ், வி.எஸ். அமிர்தவர்ஷினி. ஆலயம் ஸ்கிரீன் பிரின்டர்ஸ் ஏ.அருணாச்சலம், ஏ.சந்திரன், வழுதுார் டாக்டர் எஸ்.முனியசாமி, ராமநாதபுரம் ஜெகன் மெட்டல்ஸ் குமரவேல், கோபாலகிருஷ்ணன், போக்குவரத்துத்துறை தேர்வு நிலை கண்காணிப்பாளர் எஸ்.விஜயகுமார், ரெகுநாதபுரம் மல்லிகை முனியசாமி, விரிவுரையாளர் பி.வெங்கடேஷ்வரன்.ரெகுநாதபுரம் பாலமுருகன், அ.தி.மு.க., ஒன்றிய அவைத்தலைவர் சுப்புத்தேவன் வலசை உடையத்தேவர், ராமநாதபுரம் பார்வதி விலாஸ் வெண்ணெய் நெய் ஸ்டோர் வெண்மதிநாதன், பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். புத்தாண்டு தினத்தன்று இரவு வல்லபை ஐயப்ப பக்தர்களின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.
*முதுகுளத்துார் சுப்பிரமணிய சுவாமி ஆலய வளாகத்தில் அமைந்துள்ள ஜயப்பன் சுவாமிக்கு 48ம் ஆண்டு மண்டலபூஜையும், 33ம் ஆண்டு விளக்குபூஜை சரக பொறுப்பாளர் வைரவ சுப்பிரமணியன் தலைமையில், பாலகுருசாமி ஜயப்ப பக்தர்கள் குழு குருநாதர் திருமால் முன்னிலையில் நடந்தது.
*திருவாடானை, தொண்டி, சின்னக்கீரமங்கலம் ஐயப்பன் கோயில்களில் மண்டல பூஜை நடந்தது.
* பரமக்குடி தரைப்பாலம் அருகில் உள்ள தர்மசாஸ்தா ஐயப்பன் கோயில், ஐந்து முனை ரோடு ஐயப்பன் கோயில், பரமக்குடி புண்ணிய பூமி ஐயப்பன் கோயில், எமனேஸ்வரம் ஐயப்ப சுவாமி கோயில் உட்பட திரவுபதி அம்மன் கோயிலில் சபரிகிரீசா ஐயப்ப பக்தர்கள் குழு சார்பில் 4ம் ஆண்டு மண்டல பூஜை விழா நடந்தது.
* கமுதி கோட்டைமேடு ஐயப்பன் கோயிலில் சற்குருநாதர் மகேந்திரன் தலைமையில், குருநாதர் பாண்டி முன்னிலையில் மண்டல பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.