பதிவு செய்த நாள்
28
டிச
2018
11:12
கோவை: கோவை நகர் உப்பார வீதியிலுள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கட்ரமண சுவாமி திருக்கோவிலில் நாளை காலை, 5:00 மணிக்கு மார்கழி மாதத்தையொட்டி, ஆண்டாள் அருளிய திருப்பாவையின், 14ம் பாடலை பக்தர்கள் பாடி சிறப்பு வழிபாடு செய்கின்றனர். குழந்தை பேறு இல்லாத தம்பதியர் புதன்தோறும், இக்கோவிலில் உள்ள சந்தானகோபாலகிருஷ்ணருக்கு பால், தயிர், இளநீர், தேன் கொண்டு அபிஷேகம் செய்து, பின் கோவில் தீர்த்தத்தை உட்கொண்டால் குழந்தைப்பேறு ஏற்படும் என்பது நம்பிக்கை. மார்கழியையொட்டி இக்கோவிலில் நாளை காலை, 5:00 மணிக்கு ஆண்டாள் அருளிய திருப்பாவையின், ‘உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்’ என்று துவங்கும் பாடலை பக்தர்கள் பாடுகின்றனர். பாடலின் பொருள்: ‘எங் களை வந்து எழுப்புவேன் என்று சொல்லி மறந்து போன பெண்ணே! சொன்ன சொல்லைக் காப்பாற்றாமல் விட்டோமே என்ற நாணமும் இல்லாதவளே! அழகாக மட்டும் பேசுபவளே. செந்தாமரை போன்ற அழகிய கண்களையும், அகன்ற தோள்களில் சங்கு சக்கரத்தை ஏந்தியவனுமான ஸ்ரீமந் நாராயணனை பாட எழுந்திரு என்கின்றனர் பெண்கள்’ என்பதே இப்பாடலின் பொருள்.