பதிவு செய்த நாள்
28
டிச
2018
12:12
கோவை:ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம் சார்பாக நடைபெறும், 68வது பூஜா மஹோத்ஸவத்தின் இரண்டாம் நாளான நேற்று, மஹாருத்ர யக்ஞம் நடைபெற்றது.ராம்நகர் ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கத்தில், நேற்று காலை, 5:30 மணிக்கு, கிராமபிரதக்ஷினம், விக்னேஸ்வர பூஜை, கலச ஸ்தாபனம், ஆச்சார்ய ரித்விக் வர்ணமும், 9:00க்கு மஹாருத்ரயக்ஞமும், உபநிஷத்பாராயணம் மற்றும் தம்பதி பூஜையும் நடந்தது.பகல் 12:00க்கு, பூர்ணாஹூதி, வசோர்தாரை, மஹாதீபாராதனையும், இரவு 7:00க்கு, போத்தனுார் கவுதம் பாகவதர் குழுவினரின் நாமசங்கீர்த்தன நிகழ்ச்சி நடந்தது.இன்று காலை 5:30 மணிக்கு, விக்னேஸ்வர பூஜையும், 7:00க்கு சண்டி ஹோம மஹாசங்கல்பம், 7:30 க்கு, நவசண்டி மஹாயக்ஞம், ஸப்தசதி பாராயணம், ஸ்ரீராமசடாக்ஷரி ஹோமம் நடக்கிறது.பகல் 12:00க்கு, தம்பதிபூஜை, சுவாஸினி பூஜை, குமாரி பூஜை, வடுக பூஜை, பகல் 1:00 மணிக்கு பூர்ணாஹூதி, வசோர்தாரை, மஹாதீபாராதனையும், இரவு 7:00 மணிக்கு, பஹ்ரைன் ஸ்ரீ அனந்தபத்மநாபன் பாகவதர் குழுவினரின் நாமசங்கீர்த்தனமும் நடைபெறுகிறது.