பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில், துாய அன்னை சாரதா தேவி, 166வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. வித்யாலய வளாகத்தில் உள்ள கோவிலில், நேற்று காலை மங்கள ஆரத்தியுடன் விழா துவங்கியது. வித்யாலய மாணவர்களின் பஜனை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, வித்யாலய நிறுவனங்களின் செயலாளர் சுவாமி கரிஷ்டனந்தர் ஆன்மிக சொற்பொழிவாற்றினார்.விழாவில், வித்யாலய வளாகத்தில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களை சேர்ந்த, 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். ராமகிருஷ்ணர் கோவிலில் விசேஷ ஹோமம் நடந்தது. இதில், வித்யாலய நிறுவனங்களின் பணி புரியும் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். அன்னதானம் நடந்தது. தொடர்ந்து, பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு வழிபாடு நடந்தது. விழா ஏற்பாடுகள், வித்யாலய கல்வி நிறுவனங்களின் செயலாளர் சுவாமி கரிஷ்டனந்தர் தலைமையில் செய்யப்பட்டு இருந்தது.