பதிவு செய்த நாள்
29
டிச
2018
12:12
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், ஆதிபராசக்தி சித்தர் பீடத்திற்கு, சக்தி மாலை அணிந்து விரதமிருந்த செவ்வாடை பக்தர்கள், இருமுடி செலுத்த, நேற்று மேல்மருவத்துாருக்கு பயணித்தனர். அதன்படி, காஞ்சிபுரம், 47வது வார்டு, ஒரிக்கை ராஜன் நகர், மேல்மருவத்துார் மன்றத்தில் உள்ள
செவ்வாடை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சக்திமாலை அணிந்து விரதம் மேற்கொண்டனர். நேர்த்திக்கடன் செலுத்த இருமுடி எடுத்த பக்தர்கள், நேற்று மேல்மருவத்துாருக்கு புறப்பட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை, மன்ற தலைவர், யோகலட்சுமி பழனி மற்றும் இளைஞரணி பழனிவேல் செய்திருந்தனர்.