பதிவு செய்த நாள்
01
ஜன
2019
12:01
புதுச்சேரி: பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில், வரும் 5ம் தேதி அனுமன் ஜெயந்தி மகோற்சவம் நடக்கிறது. புதுச்சேரி-தின்டிவனம் சாலையில் உள்ள பஞ்சவடீயில், 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்ஜநேயர் கோவிலில், வரும் 5ம் தேதி அனுமன் ஜெயந்தி மகோற்சவம் நடக்கிறது. இதையொட்டி, நாளை 2ம் தேதி முதல் 5ம் தேதி வரை, தினமும் அனுமன் ஜெயந்தி மகோற்சவ லட்சார்ச்சனை, பஞ்சமுக ஹோமம், மூலமந்திர ஹோமம், பூர்ணாஹூதி நடக்கிறது.நாளை மாலை 6:00 மணிக்கு அனுமந்த் ஜெயந்தி உற்சவம் துவங்குகிறது.
3ம் தேதி காலை 7:00 மணிக்கு, யஜமான சங்கல்பம், புண்யாஹவாசனம், கும்பஸ்தாபனம், அக்னி மதனம், கும்ப ஆவாஹனம், மூலமந்திரஹோமம், லட்சார்ச்சனை ஆரம்பமாகிறது. மாலை 5:00 மணிக்கு புண்யாஹவாசனம், பஞ்சஸூக்தஹோமம், மூலமந்திர ஹோமம், சாற்றுமுறை லட்சார்சனையும், 4ம் தேதி விசேஷ ஹோமம், லட்சார்ச்சனை நடக்கிறது. 5ம் தேதி காலை 7:00 மணிக்கு அனுமன் ஜெயந்தி மகோற்சவம், புண்யாஹவாசனம், பஞ்சஸூக்தஹோமம், மூலமந்திரஹோமம், காலை 8:30 மணிக்கு 2 ஆயிரம் லிட்டர் பால், வாசனை திரவியங்களால், 36 அடி உயர ஆஞ்ஜநேய சுவாமிக்கு விசேஷ திருமஞ்சனம், வேத கோஷம், ஷோடச உபசாரம், லட்சார்ச்சனை பூர்த்தி நடக்கிறது. அதைத் தொடர்ந்து மாலை 4:00 மணிக்கு சீதாராம சிறப்பு திருக்கல்யாணம் நடக்கிறது.அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, 5ம் தேதி காலை 10:00 மணி முதல், பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம், டிரஸ்ட் மூலம் வழங்கப்பட உள்ளது. ஏற்பாடுகளை பஞ்சமுக ஸ்ரீஜெயமாருதி சேவா டிரஸ்ட்டியினர் செய்து வருகின்றனர்.