கோவை: ஆங்கில புத்தாண்டையொட்டி, ஈச்சனாரி விநாயகர் கோவிலில் இன்று, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஆங்கில புத்தாண்டையொட்டி, ஈச்சனாரி கோவிலில், விநாயகருக்கு, காலை, மங்கள திரவிய அபிஷேகம், ஹோமம் நடைபெற்றது. சுவாமிக்கு, தங்கக்கிரீடம் அணிவித்து, கஸ்துாரி மஞ்சள், மலர் மாலை அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.