அவலுார்பேட்டை: அவலுார்பேட்டையில் பழனி சுவாமிக்கு குரு பூஜை விழா நடந்தது. மேல்மலையனுார் தாலுகா அவலுார்பேட்டை முத்து விநாயகர் கோவிலில் பழனி சுவாமிகளுக்கு குரு பூஜை விழா நடந்தது. நேற்று காலை மங்கள இசையுடன் விழா துவங்கியது. பழனி சுவாமி ஜீவ சமாதியில் அபிஷேகம், தீபாரதனையை தொடர்து, பழனி சுவாமி திருஉருவச்சிலை சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடந்தது.