பதிவு செய்த நாள்
02
ஜன
2019
01:01
திண்டுக்கல்:திண்டுக்கல்லில் ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி சர்ச் மற்றும் கோயில் களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன், அபிராமி அம்மன், மலையடிவாரம் சீனிவாச பெருமாள், வெள்ளை விநாயகர், நன்மை தரும் 108 விநாயகர், ரயிலடி சித்தி விநாயகர், என்.ஜி.ஓ., காலனி முருகன், தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் புத்தாண்டை முன்னிட்டு அதிகாலையில்நடை திறக்கப்பட்டது.
சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டனர். அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் பாதுகாப்பிற்காக ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
* தேவாலயங்களில் பிரார்த்தனை: திண்டுக்கல் புனித வளனார் பேராலயத்தில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி தலைமையில் நடந்தது. மேட்டுப்பட்டி வியாகுலமாதா ஆலயம், குமரன் திருநகர் ஆரோக்கியமாதா ஆலயம், என்.ஜி.ஓ., காலனி ஆரோக்கிய அன்னை பேராலயம், மாரம்பாடி அந்தோணியார் ஆலயம், மங்கமனூத்து சந்தியாகப்பர் ஆலயம், மரியநாதபுரம் உட்பட பல இடங்களில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. அதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
* பழநி:புத்தாண்டு பிறப்பையொட்டி மலைக்கோயில், திருஆவினன்குடி கோயில், பெரியநாயகியம்மன் கோயில், பெரியாவுடையார் கோயில், பட்டத்து விநாயகர் கோயில்களில் அதிகாலை நான்கு மணிக்கு நடை திறக்கப்பட்டது. அபிஷேகங்கள், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அலகுகுத்தியும், காவடி, பால்குடங்கள் எடுத்து அபிஷேகம் செய்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ரோப்கார், வின்ச் ஸ்டேஷனில் இரண்டு மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் மலைக்கோயில் சென்றனர். பொதுதரிசனம் வழியில் ஐந்து மணிநேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். இதேபோல இரவு தங்கரதபுறப்பாட்டை காணவும் பக்தர்கள் கூட்டம் திரண்டது.
* பழநி: ராஜாஜிரோடு சி.எஸ்.ஐ., இமானுவேல் தேவாலயத்தில் பாதிரியார் கிருபாதாஸ் தலைமையில் நேற்றுமுன்தினம் இரவு முதல் பழைய ஆண்டு சிறப்பு ஆதாரானையும், அதன்பின் நள்ளிரவு 12:00மணிக்குமேல் 2019 புத்தாணடுபிறப்பு சிறப்பு கூட்டுவழிபாடு ஆதாரதனையும் நடந்தது. புதுதாராபுரம் ரோடு புனித மிக்கேல் வானதூதர் ஆலயத்தில் பங்குத்தந்தை ஜெயசீலன் தலைமையில் கூட்டு பிரார்த்தனை நடந்தது. நள்ளிரவு 12:00 மணிக்கு பட்டாசுகள் வெடித்து புத்தாண்டை இளைஞர்கள் ஆராவாரத்துடன் வரவேற்றனர்.
இதேபோல மானூர், பச்சளநாயக்கன்பட்டி, புளியம்பட்டி பகுதி கிறிஸ்துவ ஆலயங்களில் நடந்த புத்தாண்டு பிறப்பு சிறப்பு கூட்டு பிரார்த்தனைகளில் பலர் பங்கேற்றனர்.பக்தர்கள் அவதி: ஆக்கிரமிப்பு தள்ளுவண்டி கடைகள், மற்றும் கையேந்தி வியாபாரிகளால் பாதவிநாயகர் கோயில், சன்னதிவீதி, வடக்குகிரிவீதியில் பக்தர்கள் பாதிக்கப்பட்டனர்.
கிரிவீதிகள், அருள்ஜோதி வீதி, அய்யம்புள்ளி ரோடு, குளத்துரோடு, பூங்காரோடு மற்றும் திருஆவினன்குடி கோயில் அருகே இருபுறங்களிலும் வரைமுறையின்றி வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தது. போதியளவில் போலீசார் பணியில் இல்லாததால் வாகனங்கள், கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் சிரமப்பட்டனர்.ஒட்டன்சத்திரம்:
* நிலக்கோட்டை: ஆர்.சி., சர்ச்சில் பாதிரியார் மரியபிரபு தலைமையில் நடந்தது. சி.எஸ்.ஐ., சர்ச்சில் வேதமுத்து தலைமையில் நடந்தது. நிலக்கோட்டை, பிலிப்ஸ் நகர் மற்றும் சுற்றுப்புற கிராமத்தினர் திருப்பலியில் பங்கேற்றனர். சிலுக்குவார்பட்டியில் பாதிரியார் பால்ராஜ் தலைமையில் நடந்தது.
* முருகத்தூரன்பட்டி: சங்கராபுரம், கல்லடிப்பட்டி கிராமத்தினர் பங்கேற்றனர். மைக்கேல்பாளையத்தில் பாதிரியார் சேவியர் தலைமையில் நடந்தது. சங்கால்பட்டி, சமத்துவபுரம், சுட்டிகாலடிபட்டி, ராயப்பன்பட்டி கிராமத்தினர் பங்கேற்றனர். கவிராயபுரம் குழந்தை யேசு சர்ச்சில் பாதிரியார் இன்னாசி தலைமையில் நடந்தது. மன்னவராதி, கரியாம்பட்டி கிராமத்தினர் பங்கேற்றனர்.
* வத்தலக்குண்டு: தோமையார் ஆர்.சி., சர்ச்சில் பங்கு பாதிரியார் சேவியர் தலைமையில் நடந்தது. உதவி பாதிரியார் ஸ்டாலின் பிரபு, அன்னை வேளாங்கண்ணி பள்ளி முதல்வர் ரெக்ஸ்பீட்டர் முன்னிலை வகித்தனர். வத்தலக்குண்டு, மரியாயிபட்டி, சின்னுபட்டி, கரட்டுப்பட்டி, வெங்கடாஸ்திரிகோட்டை கிராமத்தினர் பங்கேற்றனர். மேலக்கோயில் பட்டியில் பங்கு பாதிரியார் ஜெயராஜ் தலைமையில் நடந்தது.
உதவி பாதிரியார் ஆண்டனிசெழியன், கிராமத்தினர் பங்கேற்றனர்.சி.எஸ்.ஐ., சர்ச்சில் தெய்வக்கனி தலைமையில் நடந்தது. பட்டிவீரன்பட்டி, தேவதானபட்டி, சித்தரேவு, சித்தையன்கோட்டை, விராலிப்பட்டி, கொன்னம்பட்டி உட்பட 12 கிராமத்தினர் பங்கேற்றனர்.சாணார்பட்டி:
* சின்னாளபட்டி: சதுர்முக முருகன் கோயிலில், விஸ்வரூப தரிசனம் நடந்தது. பால், பன்னீர், இளநீர், தயிர், தேன் உள்ளிட்ட திரவிய அபிஷேகத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், 30 வகை அபிஷேகத்துடன் கனி வகை அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.