அலங்காநல்லூர்: புத்தாண்டு தினத்தையொட்டி அழகர்மலை உச்சியில் உள்ள நூபுரகங்கையில் ஏராளமான பக்தர்கள் நேற்று (ஜன.,1ல்)காலை முதல் மாலை வரை புனித நீராடி அங்குள்ள ராக்காயி அம்மனை தரிசித்தனர். சோலைமலை முருகன் கோயிலில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி மற்றும் மலையடிவாரத்தில் உள்ள மூலவர் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத சுந்தரராஜபெருமாளுக்கு சிறப்பு அலங்காரம், விசேஷ பூஜை, தீபாராதனை நடந்தது. பக்தர்கள் நெய் விளக்கேற்றி சுவாமி
தரிசனம் செய்தனர். முன்னதாக காவல் தெய்வமான 18ம் படி கருப்புசாமியை வணங்கினர். ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து செய்திருந்தனர்..