பதிவு செய்த நாள்
03
ஜன
2019
01:01
பந்தலூர்:பந்தலூர் அருகே அய்யன்கொல்லி ஐயப்பன் கோவில் திருவிழாவில், பக்தர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
அய்யன்கொல்லி ஐயப்பன் கோவில் திருவிழா கடந்த 29ல் துவங்கியது. தொடர்ந்து நாள் தோறும் பல்வேறு பூஜைகளும், அன்னதான நிகழ்ச்சி, தீபாராதனை, பஜனை, அத்தாழ பூஜை மற்றும் இரவு அன்னதானம் நடந்தது.30ல் கணபதி ஹோமமும், திருவிளக்கு ஊர்வலம், நாமக்கல் ராமகிருஷ்ணா மடத்தை சேர்ந்த பூர்ணசேவானந்தா மஹாராஜ சுவாமிகள் பங்கேற்ற ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
தொடர்ந்து, நடந்த தாலப்பொலி ஊர்வலத்தில் நாதசுரம், செண்டைமேளம், அம்மன் குடமாட்டம், நிலக்காவடி, சிங்காரிமேளம், தேவரூபங்கள் ஆகிய நிகழ்ச்சிகளுடன், பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.அதனையடுத்து தீபாராதனை, அத்தாழபூஜை, நடன நிகழ்ச்சிகளும், திருவிழா நிறைவு பெற்றது.