திண்டிவனம்:திண்டிவனம் வசந்தபுரத்தில், மறைந்த காஞ்சி மடாதிபதி சந்திரசேகர சரஸ்வதி சுவாமியின் ஆராதனை விழா நேற்று (ஜன.,2ல்) காலை நடந்தது.இதையொட்டி காலை 9.00 மணிக்கு வேத கோஷம் முழுங்க மகா சங்கல்பம் நடந்தது. தொடர்ந்து கணபதி பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடந்தது.
விழாவையொட்டி செஞ்சி ரோட்டிலுள்ள அங்காளம்மன் கோவில் அருகே பிராமணர் சங்கம் சார்பில் நடந்த அன்னதானத்தை முருக்கேரி பிராமணர் சங்க தலைவர் சீனுவாசன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், பிராமணர் சங்க மாவட்ட இளைஞரணி தலைவர் நாகராஜன் மற்றும் நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.