பதிவு செய்த நாள்
03
ஜன
2019
02:01
சென்னை: ஆபத்து ஏற்படலாம் என்பதால், சபரிமலை கோவிலில் வழிபட்ட இரு பெண்களுக்கு, போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என, வி.சி., தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்பது, இன்று (ஜன., 3ல்) நனவாகியிருக்கிறது. நேற்று (ஜன.,2ல்) அதிகாலை, சபரிமலையில் வழிபாடு செய்ததன் வாயிலாக, பிந்து, கனகதுர்கா என்ற, இரு பெண்களின் பெயர்களும், வரலாற்றில் நீங்கா இடம் பிடிக்கும்.அவர்களுக்கு, வெறியர் களால் ஆபத்து நேரிடலாம் என்பதால், உரிய பாதுகாப்பு வழங்க, கேரள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இனிமேலும், சபரிமலை யில், பெண்கள் வழிபட யாரேனும் இடையூறு செய்தால், அவர்களை, இரும்புக் கரத்துடன், கேரள அரசு ஒடுக்க வேண்டும்.இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.