பதிவு செய்த நாள்
05
ஜன
2019
01:01
ராசிபுரம்: ராசிபுரம், பொன் வரதராஜ பெருமாள் கோவிலுக்குட்பட்ட அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோவிலில், இன்று அனுமன் ஜெயந்தி விழா நடக்கவுள்ளது. அதிகாலை, 4:30க்கு வேத பாராயணம், சுதர்சன ?ஹாமம், அஷ்டலட்சுமி ?ஹாமம் உள்ளிட்டவை நடக்கின்றன. காலை, 6:00 மணிக்கு மூலவர் உற்சவம், சிறப்பு திருமஞ்சனம், கூட்டு பிரார்த்தனை, மகா தீபாராதனை நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது. மாலை, 5:00 மணிக்கு நவ மாருதி நண்பர்கள் குழு சார்பில், பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி, 6:00 மணிக்கு உற்சவர் திருவீதி உலா நடக்கிறது. மேலும், ராசிபுரம் வீர ஆஞ்சநேயர், வைர ஆஞ்சநேயர், மெட்டாலா ஆஞ்சநேயர், கணவாய் மேடு ஆஞ்சநேயர் கோவில், நாமகிரிப்பேட்டை வருதராஜ பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில், அனுமன் ஜெயந்தி நடக்கவுள்ளது.