அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன் பட்டி நான்கு வழிச்சாலை அருகே ராமசாமிபுரத்தை சேர்ந்த கருப்பசாமியின் தோட்டம் உள்ளது.
இதை கஞ்சநாயக்கன்பட்டி அய்யதுரைக்கு குத்தகைக்கு விட்டுள்ளார். இங்கு கீரை பயிரிட்டுள்ளனர். நேற்று (ஜன., 4ல்) தோட்டத்தில் உள்ள கிணற்றில் மோட்டார் பழுதாகியதை பார்ப்பதற்கு அய்யாதுரையின் மகன் அருணாச்சலம் கிணற்றில் இறங்கி உள்ளார்.
அங்கு 4 கோபுர கலசங்கள் இருப்பதை கண்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அருப்புக் கோட்டை டவுன் போலீசார் கலசங்களை கைபற்றி விசாரிக்கின்றனர்.