பதிவு செய்த நாள்
05
ஜன
2019
02:01
ராயப்பேட்டை: பகவான் யோகி ராம்சுரத்குமார், 100வது ஜெயந்தி விழா, நேற்று விமரிசையாக துவங்கியது. பகவான் யோகி ராம்சுரத்குமாரின், 100வது ஜெயந்தி விழா, ராயப்பேட்டை நல்வாழ்வு திருமண மண்டபத்தில், நேற்று (ஜன., 4ல்) துவங்கியது. இவ்விழா, நாளை (ஜன., 6ம்) தேதி வரை நடைபெறுகிறது.
முதல் நாளான நேற்று (ஜன., 4ல்) காலை, 6:00 மணிக்கு, கணபதி ஹோமம், ரிக், யஜீர், சாம, அதர்வண வேத பாராயணம் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, மஹாரண்யம் பூஜ்யஸ்ரீ முரளீதர சுவாமிகள், பேருரை ஆற்றினார்.விழாவின், இரண்டாம் நாளான, இன்று மாலை, குரு மஹிமை, ஹனுமத் மஹிமை குறித்து, பிரம்ம ஸ்ரீ சுந்தர ராம தீக் ஷிதர் உபன்யாசம் வழங்குகிறார்.யோகி ராம்சுரத்குமார் சத்சங் சமிதி அறக்கட்டளையின் தலைவர், ஓய்வு பெற்ற நீதிபதி, டி.எஸ்.அருணாசலம், நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்துள்ளார்.முரளீதர சுவாமிகள் கூறியதாவது:மகான்களின் பிறப்பு, சாமன்யமாக தான் இருக்கும். ஆனால் அவர்கள், இந்த உலகத்தை விட்டு மறையும் போது, வித்தியாசப்படுகின்றனர்.
திருவண்ணாமலையில், ரமணர் சித்தியாகும் போது, மயில்கள் கூவின. மயில்கள் கூட்டமாக கூவினால், ஒருவரது ஜீவன் பிரியப்போகிறது என, அர்த்தம்.இவ்வாறு அவர் கூறினார்.