பதிவு செய்த நாள்
05
ஜன
2019
02:01
அவிநாசி: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, ஆஞ்சநேயருக்கு சமர்ப்பிக்க, நவதானியங்களால் ஆன மாலை உருவாக்கப் பட்டுள்ளது.
இன்று (ஜன., 5ல்) அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. அவ்வகையில், அவிநாசி அருகே திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு, நவக்கிரஹங்களை குறிக்கும் விதமாக, நவதானிய மாலை சமர்ப்பிக்கப்படுகிறது.இது குறித்து, அவிநாசியில் பூக்கடை வைத்துள்ள பாபு கூறுகையில், ஆஞ்சநேயரை வழிபட்டால், நவக்கிரஹ தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். அதனால், நவ தானியம் வைத்து, வழிபடுவர்.அவ்வகையில், அனுமன் ஜெயந்திக்காக, நவ தானியங்களில் மாலை உருவாக்கி உள்ளோம். பூண்டி கோவிலிலுள்ள ஆஞ்சநேயருக்கு, இந்த மாலை சமர்ப்பிக்கப்பட உள்ளது, என்றார்.