சென்னை மைலாப்பூரில் ஸ்ரீ மஹா பெரியவாளின் மார்கழி உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜன 2019 01:01
சென்னை நங்கநல்லூர் வக்கீல் கி.வெங்கடசுப்ரமணியனின் பெரியவா கிரஹத்தில் காஞ்சி ஸ்ரீ மஹா பெரியவாள் எழுந்தருளியுள்ளார். காஞ்சி ஸ்ரீ மஹா பெரியவாளின் தனுர் மாத , ரதத்தின் மீதான வீதியுலா ஜனவரி 12 மற்றும் 13 ம் தேதியன்று மைலாப்பூரிலுள்ள பல பிரதான கோயில்கள் மற்றும் வீதிகள் வழியாக நடைபெற்றது. சென்னை மயிலை கபாலீஸ்வரர் கோவிலில் ஆரம்பித்து பல பிரதான வீதிகளில் நடைபெற்ற இந்த ஸ்ரீ மஹா பெரியவாளின் தனுர் மாஸ்ய பஜனோத்சவத்தின்போது தங்கள் வீட்டு வாசல்களில் கோலமிட்டும் , தீபம் ஏற்றியும், மற்றும் நைவேதிய பொருட்களுடன் காத்திருந்து பூர்ண கும்பத்துடன் பல இடங்களில் தங்கள் குடும்பத்தினருடன் பலர் தரிசனம் செய்தனர். ஸ்ரீ மஹா பெரியவா ரதத்தில் அமர்ந்து இந்த வீதியுலாவில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வாசுதேவன் மற்றும் ரமணன் தங்கள் குழுவினருடன் நாம சங்கீர்த்தனம் மற்றும் இசையுடன் நடைபெற்ற இந்த வீதியுலாவில் அதிகாலையாயிருப்பினும் பல்வேறு தரப்பட்ட ஆன்மீக அன்பர்கள் திரளாக பங்கேற்று ஸ்ரீ மஹா பெரியவாளின் அனுக்கிரஹம் பெற்றனர். மதுரை சோலைமலை முருகன் கோயில் தைப்பூசம் கொடியேற்றத்தில் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் சுவாமி சுப்பிரமணியர் .மதுரை சோலைமலை முருகன் கோயில் தைபூசம் கொடியேற்றம் நேற்று நடந்தது.