பதிவு செய்த நாள்
14
ஜன
2019
02:01
வடவள்ளி:தைப்பூசத்திருவிழாவுக்கு பக்தர்கள் கூட்டம், மருதமலையில் அலைமோதும் என்பதால், அடிவாரத்தில் பயோ டாய்லெட் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.
முருகனின் ஏழாம் படை வீடாக பக்தர்களால் கருதப்படும், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசம், கந்தசஷ்டி, கிருத்திகை போன்ற விழாக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும்.வரும், 21ல் தைப்பூசத்தேர்திருவிழா நடக்கவுள்ளது. பொங்கல் அன்று கொடியேற்றத்துடன் தைப்பூசத்திருவிழா துவங்கி, தொடர்ந்து, 10 நாட்கள் நடக்கும்.
பொங்கல் விடுமுறை என்பதால், இந்தாண்டு பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.புத்தாண்டு தினத்தில், ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வந்தனர். தைப்பூசத்துக்காக, அடிவாரத்தில் தற்காலிக குடிநீர் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. அடிவாரத்தில் ஒரு கட்டண கழிப்பிடம் மட்டுமே உள்ளது. விழாக்காலங்களில், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடம் என்பதால், பயோ டாய்லெட் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.