பதிவு செய்த நாள்
19
ஜன
2019
12:01
திருவேற்காடு: திருவேற்கோடு, தேவி கருமாரியம்மன் கோவிலில், 25ம் ஆண்டு பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, நேற்று தேரோட்டம் நடந்தது. பூந்தமல்லியை அடுத்த திருவேற்காட்டில், பிரசித்திபெற்ற, தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், 25ம் ஆண்டு, பிரம்மோற்சவ விழா, 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இவ்விழாவின், ஏழாம் நாளான நேற்று, கோபூஜை, 1,008 சங்காபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மனை வைத்து, பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். சன்னதி தெரு, தேரோடும் வீதி உள்ளிட்ட முக்கிய தெருக்கள் வழியாக, தேர் பவனி வந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, அம்மனின் அருளை பெற்றனர்.