திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜன 2019 03:01
திருவள்ளூர்:திருவள்ளூர், தீர்த்தீஸ்வரர் கோவிலில், 108 சங்காபிஷேகம் நாளை 20ம் தேதி,, நடைபெறுகிறது.திருவள்ளூர், பஜார் தெருவில் திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், கும்பாபிஷேகம் நடைபெற்ற நாளை முன்னிட்டு, 20ம் தேதி, மாலை, 6:00 மணிக்கு, தீர்த்தீஸ்வரருக்கு, 108 சங்குகளில் அபிஷேகம் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து, அம்பாள் திரிபுரசுந்தரிக்கு அபிஷேக ஆராதனை நடைபெறும்.