பதிவு செய்த நாள்
21
ஜன
2019
04:01
சேலம்: தைப்பூசத்தை முன்னிட்டு, சேலம், ஊத்துமலை முருகன், கந்தாஸ்ரமம், செவ்வாய்ப் பேட்டை சித்திரைச்சாவடி முருகன், குமரகிரி முருகன், ஏற்காடு அடிவாரம் பாலசுப்ரமணியர், பேர்லேண்ட்ஸ் முருகன், காவடி பழநியாண்டவர் ஆசிரமம் உள்பட, சேலம் மாநகர், மாவட்டத் திலுள்ள முருகன் கோவில்களில், இன்று (ஜன., 21ல்)காலை முதல், சிறப்பு அபிஷேகம், பூஜை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, அந்தந்த கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர். மேலும், கோவில்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.