சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமி ஊஞ்சல் உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜன 2019 03:01
நடுவீரப்பட்டு:சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜ ராஜேஸ்வரி சமேத ராஜ ராஜேஸ்வரர் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு நேற்று முன்தினம் (ஜன., 20ல்) ஊஞ்சல் உற்சவம் நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் 20ம் தேதி மாலை 3:00 மணிக்கு விநாயகர், ராஜ ராஜேஸ்வரர், ராஜ ராஜேஸ்வரி, தண்டாயுதபாணி, நால்வர் மற்றும் பரிவார மூர்த்தி களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
மாலை 6:00 மணிக்கு பக்தர்கள் கோவில் அடிவாரத்தை வலம் வந்து நேர்த்தி கடன் செலுத்தினர். இரவு 8:00 மணிக்கு ராஜ ராஜேஸ்வரி அம்மன் ஆலய உலாவாக வந்து ஊஞ்சல் மண்டபத்தில் உள்ள ஊஞ்சலில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது.விழா ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம் தலைமை யிலான குழுவினர் செய்திருந்தனர்.