தேவகோட்டை : தேவகோட்டை கருதாவூரணி வடகரையில் 77 படிகளுடன் தண்டாயுதபாணி மலைக்கோயில் 2012 ல் கட்டப்பட்டது. பழநி கோயிலை போன்ற வடிவத்தில் தண்டாயுதபாணி சுவாமி உள்ளார்.நேற்று (ஜன., 21ல்) தைப்பூச விழா நடந்தது.
காலையில் சுவாமிக்கு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர். அன்னதானத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே உலகம்பட்டி ஞானியார் மடத்தில் தைப்பூச விழா நடந்தது. இதையொட்டி கோயிலில் தண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. சித்தர் சேவுகானந்தா ஞானியாருக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். சிவன் கோயிலில் இருந்து தேவிமார்களுடன் சுப்ரமணியர், ஞானியார் மடத்தில் எழுந்தருளினார். சுவாமிக்கு ஊஞ்சலாட்டு நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக பக்தர்கள் காவடி எடுத்து வந்தனர்