பதிவு செய்த நாள்
23
ஜன
2019
02:01
மகுடஞ்சாவடி: கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தீர்த்தகுட ஊர்வலம் நடந்தது.
காகாபாளையம் அருகே, கனககிரி, மலைப்பிரியம்பாளையம், பெரியாண்டிச்சியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த, 5ல் யாகசாலை கால்கோள் விழா நடந்தது. நேற்று (ஜன., 21ல்) காலை, 9:00 மணிக்கு, கஞ்சமலை சித்தர்கோவிலில் இருந்து, ஏராளமான பக்தர்கள், தீர்த்தக்குடங்களை தலையில் சுமந்தபடி, ஊர்வலமாக சென்று, கோவிலை அடைந்தனர்.
மாலை, 6:00 மணிக்கு, விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, முதற்கால யாகவேள்வி, பூர்ணாஹூதி நடந்தது. இன்று (ஜன., 23ல்) காலை, 6:30 மணிக்கு மேல், மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது.