குன்னூர்: குன்னூர் புனித செபஸ்தியார் தேவாலய பங்கு திருவிழா துவங்கியது. கொடியேற்றத் துடன் துவங்கிய இந்த விழாவில்,ஜெபமாலை, ஆராதனை, திருப்பலி, நவநாள் ஆகியவை நடந்தன.
வரும், 26ல் மாண்டியா மறைமாவட்ட பாதிரியார் அஜேஷ் ஏனாயில் தலைமையில், புனித அம்பு திருநாள் கொண்டாடப் படுகிறது. தொடர்ந்து காலை, 8:30 மணிக்கு புனிதரின் திருவுருவ பிரதிஷ்டை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
மாலை, 5:00 மணிக்கு குன்னூர் பஸ் ஸ்டாண்ட்டிற்கு அம்புகள் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து ஊர்வலமாக தேவாலயத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. 27ல் ஆடம்பர திருநாள் நடக்கிறது.